கைகொடுக்க மறுத்த முஸ்லிம் பெண்ணுக்கு பிரெஞ்ச் குடியுரிமை மறுப்பு!

கைகொடுக்க மறுத்த முஸ்லிம் பெண்ணுக்கு பிரெஞ்ச் குடியுரிமை மறுப்பு!
கைகொடுக்க மறுத்த முஸ்லிம் பெண்ணுக்கு பிரெஞ்ச் குடியுரிமை மறுப்பு!
Published on

அதிகாரிகளுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் பெண்ணுக்கு பிரெஞ்ச் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. 

அல்ஜீரியாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்தவரை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்தார். சில வருடங்கள் கழித்து தனக்கு பிரெஞ்ச் குடியுரிமை வேண்டும் என விண்ணப்பித்தார். இதையடுத்து குடியுரிமை கொடுப்பதற்கான விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. தென்கிழக்கு இஸரே பிராந்தியத்தில் நடந்த அவ்விழாவுக்கு அந்த முஸ்லிம் பெண் சென்றார்.

அங்கிருந்த பிரெஞ்ச் அதிகாரிகள், ‘பிரெஞ்ச் குடியுரிமை பெற வாழ்த்துகள்’ என கைகொடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பெண் அவர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார். எங்கள் மத வழக்கப்படி கைகொடுப்பதில்லை என்று கூறினார். இதை ஏற்றுக்கொள்ளாத பிரெஞ்ச் அதிகாரிகள், கைகொடுக்க மறுப்பவர் எங்கள் நாட்டு பிரஜையாக முடியாது எனக் கூறி அவரது குடியுரிமையை மறுத்துவிட்டனர். இதையடுத்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த ஆண்டு தீர்ப்பளித்த கோர்ட்டும் அதையே கூறியது. அந்த தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்தார். அங்கும் அதையே நீதிபதிகள் உறுதிபடுத்தியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com