வானிலிருந்து விழுந்த விண்கல் - வீடியோவாக ரெக்கார்ட் செய்த இசைக்கலைஞர்

வானிலிருந்து விழுந்த விண்கல் - வீடியோவாக ரெக்கார்ட் செய்த இசைக்கலைஞர்
வானிலிருந்து விழுந்த விண்கல் - வீடியோவாக ரெக்கார்ட் செய்த இசைக்கலைஞர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த இசைக்கலைஞர் ஆம்பெர் காஃப்மேன் அண்மையில் வானிலிருந்து விழுந்த விண்கற்களை வீடியோவாக ரெக்கார்ட் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


அந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் பரவலாக தற்போது அதனை பகிர்ந்து வருகின்றனர். ‘நம் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே காண முடிகின்ற இந்த அதிசய நிகழ்வை என்னால் காணமுடிந்தது. இரவு வானத்தை கிழித்துக் கொண்டு தரையை நோக்கி சென்ற அந்த விண்கற்கள் பொழிவினை படமும் பிடித்துள்ளேன். அது முற்றிலும் மாறுபட்ட அதிசய நிகழ்வாகவே நான் உணர்கிறேன்’ என தெரிவித்துள்ளார் அவர்.


‘தெற்கு டெல்டா அக்வாரிட்ஸ் மற்றும் ஆல்பா ஸ்ப்ரிகார்னிட்ஸ் மாதிரியான விண்கற்கள் பூமியில் விழுகின்ற போது தெளிவாக தெரியும்’ என இதுகுறித்து அமெரிக்க விண்கல் சொசைட்டி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com