மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட தீவிரவாதி பாகிஸ்தானில் கைது

மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட தீவிரவாதி பாகிஸ்தானில் கைது
மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட தீவிரவாதி பாகிஸ்தானில் கைது

மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்டவரும், லஷ்கர் அமைப்பின் முக்கிய தளபதியுமான ஜாகி உர் ரகுமான், தீவிரவாத வழக்கில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் ஜாகி உர் ரகுமான் லக்வி. 61 வயதான இவர் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைமை ராணுவ தளபதியாக இருந்து வருகிறார். மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட லக்வி, கடந்த 2015-ம் ஆண்டு ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

உலகின் பல்வேறு நாடுகளில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற பண உதவி செய்தல், திட்டம் தீட்டுதல், குற்றவாளிகள் தங்க இடமளித்தல் போன்ற செயல்களில் லக்விக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் லக்வியை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு காவல் நிலையத்தில் லக்வி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் பயங்கரவாத தடுப்பு துறையினரால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாகி உர் ரகுமான் மீதான வழக்கு விசாரணை லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com