இந்தியாவில் சீன பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும்: முலாயம்சிங் யாதவ்

இந்தியாவில் சீன பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும்: முலாயம்சிங் யாதவ்
இந்தியாவில் சீன பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும்: முலாயம்சிங் யாதவ்

இந்தியாவுக்கு பாகிஸ்தானை விட சீனாதான் பெரிய அச்சுறுத்தல் என்றும், அதனால் சீன பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சமாஜ்வாதிக் கட்சியின் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார். 

நாடாளுமன்ற மக்களவையில் இதுதொடர்பாகப் பேசிய முலாயம், சிக்கிம் மாநிலத்தின் தோக்லாம் பகுதியில் சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார். இந்தியாவுக்கு எதிராக சீனா செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், திபெத்தின் விடுதலைக்கு மத்திய அரசு வெளிப்படையான ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்றும், சீனப்பொருட்கள் இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் முலாயம்சிங் யாதவ் வலியுறுத்தினார். 
பாகிஸ்தானால் இந்தியாவை எதுவும் செய்ய முடியாது என்று குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானை விட சீனாவே நமது நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றார். இதைத் தாம் கடந்த 20 வருடங்களாகக் குறிப்பிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கி சீனா ஆதரவு தெரிவித்து வருவதாகவும், இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் முலாயம்சிங் யாதவ் பேசினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com