\
உலக ஆணழகன் போட்டி -3 பதக்கங்களை வென்று தமிழக வீரர்கள் அசத்தல்

உலக ஆணழகன் போட்டி -3 பதக்கங்களை வென்று தமிழக வீரர்கள் அசத்தல்

உலக ஆணழகன் போட்டி -3 பதக்கங்களை வென்று தமிழக வீரர்கள் அசத்தல்
Published on

உலக ஆணழகன் போட்டியில், ஜூனியர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த சுரேஷ் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

நடப்பு ஆண்டிற்கான உலக ஆணழகன் போட்டி உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றது. இதில் 47 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஜூனியர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த சுரேஷ், முதலிடம் பிடித்து உலக ஆணழகன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

இதேபிரிவில் சென்னையைச் சேர்ந்த மற்றொரு வீரர் விக்னேஷ் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். சீனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com