உலகம்
இரு முறை சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர் மரணம்
இரு முறை சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர் மரணம்
சந்திரனுக்கு 2 முறை சென்று திரும்பிய நாசாவின் விண்வெளி வீரர் ஜான் யங் தனது 87 வது வயதில் மரணமடைந்தார்.
அமெரிக்காவின் நாசா மையத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஜான் யங். இவர் 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 10 விண்கலம் மூலம் சந்திரனுக்கு பரிசோதனை அடிப்படையில் சென்றார். அப்போது இவர்களது விண்கலம் சந்திரனில் தரை இறங்கவில்லை. அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து அப்பல்லோ 11 விண்கலம் சந்திரனில் தரை இறங்கியது.
இவர் ஜெமினி, அப்பல்லோ மற்றும் ஸ்பேஸ் ஷட்டில் விண்கலங்கள் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். ஒரு முறை மாட்டிறைச்சியால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளை விண்வெளிக்கு கடத்திச் சென்றார். உடன் இருக்கும் வீரருக்கு அதை கடத்தி வந்ததாக கூறினார். 87 வயதில் மறைந்த இவருக்கு நாசா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.