\
மாஸ்கோவில் பற்றி எரிந்தது விமானம்: 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மாஸ்கோவில் பற்றி எரிந்தது விமானம்: 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மாஸ்கோவில் பற்றி எரிந்தது விமானம்: 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
Published on

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 41 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாஸ்கோவில் இருந்து முர்மான்ஸ்க் பகுதிக்கு 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் சூப்பர் ஜெட் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. 

இதையடுத்து விமானம் அவசர அவசரமாக மாஸ்கோ விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. அப்போது ஓடுதளத்தில் வந்துகொண்டிருந்த போது விமானத்தில் தீ பிடித்தது. அடுத்த நொடியே தீ மளமளவென்று பற்றத் தொடங்கியது. இதையடுத்து உடனடியாக நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்தது அவசர கால வழி வழியாக, பயணிகள் அலறியடித்து குதித்தனர். அவர்கள் உயிர் பயத்தில் அலறியபடி ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன

இருந்தும் இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 41 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com