உலகம்
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை - ரஷ்யா
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை - ரஷ்யா
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடைவிதித்து ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. ரஷ்யாவின் இந்நடவடிக்கையால் அந்நாட்டு மக்கள் நம்பகமான செய்தியை அறிவதில் சிக்கல் ஏற்படும் என ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. பிபிசி உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களும் மாஸ்கோவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவைத்துள்ளன.
முன்னதாக ரஷ்ய ராணுவத்தை பற்றி வதந்தி பரப்புவோருக்கு 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டத்தில் அதிபர் புட்டின் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.