Pt Headlines
Pt HeadlinesPt Web

Headlines| 5ஆவது நாளாக தொடரும் இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல் to விஜயின் தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பு!

புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்திகளானது, 5ஆவது நாளாக தொடரும் இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல் முதல் விஜயின் தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பு வரை விவரிக்கிறது.
Published on

முதல்வர் மு.க.ஸ்டாலின் - ப.சிதம்பரம் இடையே ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை.... தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல்...

30 சட்டமன்ற தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட்கள் என்ற முடிவை சொல்லி அனுப்பிய திமுக.... 36+2 என்ற கடும் பேரத்தில் காங்கிரஸ் உறுதிகாட்டுவதாக தகவல்.....

தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் உடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை... திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி...

திமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு... தேதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கக்கூடும் என எதிர்பார்ப்பு...

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்pt

மக்கள் நீதி மய்யத்துடன் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக.... 15 தொகுதிகள் கொண்ட விருப்பப் பட்டியலை மநீம வழங்கவுள்ளதாக தகவல்...

திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படைக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு... உதயசூரியன் சின்னத்தில் தாமே போட்டியிடவுள்ளதாக கருணாஸ் அறிவிப்பு...

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலர்கள் கூட்டம்.... தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்...

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என தெரியவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி.. சசிகலா தொடங்கிய புதிய கட்சியுடன் கூட்டணி இல்லை எனவும் திட்டவட்டம்.

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் இன்று நிர்வாகிகளை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்... முழுவீச்சில் நடைபெறும் இறுதிக்கட்ட ஏற்பாடுகள்...

நாங்குநேரி இரட்டை கொலை தொடர்பாக 7 பேர் கைது.... முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நெல்லை எஸ்.பி. பிரசன்னகுமார் விளக்கம்...

சுவிஸ் பத்திரிகையாளர் ‘மாயா கோனே’ பெயரிலான தேசிய விருதுகள் அளிப்பு… பழங்குடிகள், கிராமவாசிகள் இடையே பணியாற்றுவோருக்கு விருதுகளில் முன்னுரிமை அளித்த செசி அமைப்பு…

புதிய தலைமுறை ஆசிரியர் சமஸுக்கு ‘மாயா கோனே விருது’… மக்களுக்காக தொடர்ந்து செயல்படும் சமூக ஊடகருக்கான விருதைப் பெற்றார் சமஸ்..

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலுPt web

மக்களவை உரிமை மீறல் குழு உறுப்பினராக திமுகவின் மூத்த உறுப்பினர் டி.ஆர்.பாலு நியமனம்... ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவில் தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு...

ராஜ்யசபாவிற்கு போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது பாரதிய ஜனதா... கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபீன் பிஹாரிலிருந்து போட்டியிடுவதாக அறிவிப்பு...

அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான 42 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்... கட்சியின் மாநிலத் தலைவர் கௌரவ் கோகோய், ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிப்பு...

மாநிலங்களுக்கான அதிகாரம் குறித்த தமிழ்நாட்டின் முயற்சிக்கு கர்நாடகா ஆதரவு... நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை வலியுறுத்துவதில் ஒத்துழைப்போம் என ஸ்டாலினுக்கு சித்தராமையா கடிதம்....

ஈரான் உச்ச தலைவர் காமேனி கொலையைக் கண்டித்து சென்னையில் விசிக, இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்.... இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தல்...

5ஆவது நாளாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகள்... ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 787ஆக உயர்வு....

இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையம் பாதிப்பு.... கதிர்வீச்சு எதுவும் வெளியாகவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை தகவல்......

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஈரான் சிறார்களின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு... உடன் பிறந்த 3 சிறுமிளும் அருகருகே அடக்கம் செய்யப்பட்ட நிலையில் உருக்கம்....

ஈரான் முதலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதே, காமேனி கொல்லப்பட்டதற்கு காரணம்... ஆபத்தைத் தடுக்கவே முன்கூட்டியே தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம்...

ஈரானுடான பேச்சுவார்த்தைக்கு இனி நேரமில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து... பாதுகாப்பு படைகள் அனைத்தும் அழிந்த நிலையில் ஈரான் சமாதானத்திற்கு வருவதாகவும் கிண்டல்...

நீண்ட காலப் போருக்குத் தயாராகவே இருப்பதாக ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டம்... சில வாரங்களில் போர் முடிந்துவிடும் என ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் பதிலடி...

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் பாரசீக, ஓமன் வளைகுடா பகுதிகளில் 1,109 மாலுமிகளுடன் 37 இந்தியக் கப்பல்கள் சிக்கித் தவிப்பு... இந்திய கடற்படை, வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை...

டெஹ்ரானில் தாக்குதல் நடந்துவரும் நிலையில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம்... வளைகுடா நாடுகளில் தவித்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் வருகை...

மேற்கு ஆசியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை... இன்று ஒரே நாளில் 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு...

வளைகுடா நாடுகளுக்கு மீன்பிடி தொழிலுக்காக சென்று, போர் பதற்றத்தில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள்... மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து, சொந்தஊர் அழைத்து வருமாறு உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை...

வளைகுடா பிராந்தியத்தை நெருப்பு வளையத்திலிருந்து மீட்போம் என ஈரான் விவகாரத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் சூளுரை... இப்பிரச்சினை மேலும் விரிவடைவதை தடுக்க இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவும் வலியுறுத்தல்...

இஸ்ரேல், கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட 8 வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை... பிராந்திய அமைதி, இந்தியர்களின் நிலை குறித்து விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தகவல்...

ஈரான் உயர் தலைவர் காமேனி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் கலைக்கவேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தல்... அரசின் மவுனத்தால் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாக சோனியா காந்தி விமர்சனம்...

டி20 உலகக் கோப்பையில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்... இன்று கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் போட்டிக்காக தயாராகும் இரு அணி வீரர்கள்...

Pt Headlines
”பாகிஸ்தானை அடிமையாக்க இஸ்ரேல் திட்டம்.. இந்தியாவும் காரணம்” - வம்பிழுத்த அமைச்சர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com