Morning headlines for february 23th 2026
Morning headlines for february 23th 2026Pt web

Headlines | சூப்பர் 8 சுற்றை தோல்வியுடன் தொடங்கிய இந்தியா to சிக்கலில் நாசாவின் நிலவுப் பயணம்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, சூப்பர் 8 சுற்றை தோல்வியுடன் தொடங்கிய இந்தியா முதல் சிக்கலில் நாசாவின் நிலவுப் பயணம் வரை விவரிக்கிறது.
Published on

தமிழகத்தில் இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்... சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை.

சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக. முதலாவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டும் திமுக தலைமை... மதிமுக, மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தும் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு.

மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த பாஜகவின் சதியை முறியடித்தவர் முதல்வர் ஸ்டாலின் என கோவை திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

கே. பழனிசாமி
கே. பழனிசாமிPt web

தமிழ்நாட்டு மக்களை கடன்காரர்களாக மாற்றிவிட்டார் ஸ்டாலின் எனவும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய். இன்று நடக்கும் கூட்டத்திற்காக பிரம்மாண்ட பந்தல்கள் அமைப்பு.

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம்... பெண் சக்தியின் வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார் எனவும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச்சு...

பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக திருப்பூரில் பதுங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேர் கைது செய்யப்பட்டதன் எதிரொலி. தமிழக மக்கள் பாதுகாப்பில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடல்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஜி.கே.எம். தமிழ்குமரன் தேர்வு. தேர்தலில் மொத்தம் பதிவான ஆயிரத்து 170 வாக்குகளில் 788 வாக்குகள் பெற்று வெற்றி.

இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை திடீரென ஒத்திவைப்பு. இருநாடுகளின் பிரதிநிதிகளும் ஆலோசித்து தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தகவல்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் நடந்த என்கவுண்டரில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை... அடர் வனப்பகுதியில் தொடரும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டை.

அதிவேக மெட்ரோ ரயில் சேவை
அதிவேக மெட்ரோ ரயில் சேவைPt web

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. 180 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லக்கூடிய நமோ பாரத் வழித்தடத்தையும் திறந்து வைத்தார்.

இலங்கை அநுரகுமார திசநாயக அரசுக்கு எதிராக பெளத்த மத துறவிகள் போர்க்கொடி. பெளத்த மதத்தை பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தல்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு... பாகிஸ்தான் தாக்குதலில் அப்பாவிகள் இறந்ததாகவும் தக்க பதிலடி தரப்படும் என்றும் ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை.

மீண்டும் சிக்கலை சந்தித்துள்ள நாசாவின் நிலவுப் பயணம்... தொழில்நுட்பக் கோளாறால் ஆர்ட்டெமிஸ்-2 திட்டம் தள்ளி வைக்கப்படுவதாக தகவல்.

டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றை தோல்வியுடன் தொடங்கிய இந்தியா... தென்னாப்பிரிக்கா அணியிடம் வீழ்ந்தது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை... 147 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி.

Morning headlines for february 23th 2026
இந்தியாவை நசுக்கிய தென்னாப்பிரிக்கா.. தோல்விக்கான 4 காரணங்கள் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com