பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல் - 80க்கும் மேற்பட்டோர் மீட்பு

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல் - 80க்கும் மேற்பட்டோர் மீட்பு

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல் - 80க்கும் மேற்பட்டோர் மீட்பு
Published on

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்த நிலையில், 80க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஓரியண்டல் மிண்டோரா மாகாணத்தில் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கி கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 80க்கும் மேற்பட்டோர் இருந்தனர். துறைமுகத்தை நெருங்கிய போது கப்பல் திடீரென்று தீப்பிடித்தது. கப்பல் முழுவதும் தீ பரவியதால், பலர் கடலில் குதித்தனர்.

தகவலறிந்து சென்ற கடலோர காவல்படையினர் விரைந்து கடலில் தத்தளித்தவர்களை பத்திரமாக மீட்டனர். எனினும் காணாமல் போன சிலரை தேடி வருகின்றனர். என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com