அமெரிக்காவை முடக்கிய பனிப்புயல் - 60ஐ தாண்டியது உயிரிழப்பு

அமெரிக்காவை முடக்கிய பனிப்புயல் - 60ஐ தாண்டியது உயிரிழப்பு
அமெரிக்காவை முடக்கிய பனிப்புயல் - 60ஐ தாண்டியது உயிரிழப்பு

அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ தாண்டியது. நியூயார்க் உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளில் ராணுவம் தீவிரம் காட்டிவருகிறது.

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் மற்றும் குளிரால் மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60ஐ தாண்டியுள்ளது. பல்வேறு மாகாணங்கள் பனிப்புயல் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளன. சாலைகள், விமான ஓடுபாதைகள் என எங்கு பார்த்தாலும் பல அடி உயரத்திற்கு பனி குவிந்துள்ளது. இதனால் சுமார் 5 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/kN7LEwuP6qU" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நியூயார்க் மாகாணத்தில் ராணுவத்தினர் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றியும் உணவின்றியும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com