2 டன் போதைப் பொருள் பறிமுதல்: அமெரிக்க கடற்படை அதிரடி நடவடிக்கை

2 டன் போதைப் பொருள் பறிமுதல்: அமெரிக்க கடற்படை அதிரடி நடவடிக்கை

2 டன் போதைப் பொருள் பறிமுதல்: அமெரிக்க கடற்படை அதிரடி நடவடிக்கை
Published on

பசுபிக் பெருங்கடலில் சுமார் 2 டன் கொக்கைன் போதைப்பொருளை அமெரிக்க கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பசிபி‌க் பெருங்கடலி‌ன் கிழக்கு பகுதியில் அமெரிக்க கடற்படையினர் 2980 கிலோ மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இதுவரை‌ பிடிக்கப்பட்ட போதைப்பொருள்களின் அளவை விட இது மிக மிக ‌அதிகம் என அமெரிக்க கடற்படையினர் தெரிவிக்கின்றனர். 

அமெரிக்காவின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு செல்லும் முன், பெரிய அளவிலான கொக்கைன் போதைப் பொருளை தனது சக வீரர்கள் பறிமுதல் செய்ததாக கமாண்டர் கிரிஸ் ஜெர்மன் பாராட்டினார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அனைத்தும் கலிபோர்னியாவின் சான்டியாகோவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com