கனமழையால் நிலச்சரிவு: 300-க்கும் மேற்பட்டோர் பலி

கனமழையால் நிலச்சரிவு: 300-க்கும் மேற்பட்டோர் பலி

கனமழையால் நிலச்சரிவு: 300-க்கும் மேற்பட்டோர் பலி
Published on

ஆப்பிரிக்க நாடான சியர்ரா லியோன் தலைநகர் ஃபிரீ டவுனில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 179 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு படையினர் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் ஃபிரீ டவுன் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நிலச்சரிவில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com