அண்டார்டிகா| சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
பனி படர்ந்த அண்டார்டிகா கண்டத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் எண்ணிக்கை வேமாக அதிகரித்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்் ஆண்டுக்கு சராசரியாக 8 ஆயிரம் பேர் மட்டுமே அண்டார்டிகா சென்றனர். அது இப்போது ஒரு லட்சத்து 25 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போக்கு தொடர்ந்தால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் இது அந்த பகுதிக்கு மட்டுமானதாக இல்லாமல் உலகம் முழுவதுக்குமானதாக இக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனினும் அண்டார்டிகா யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாததால் அங்கு வருபவர்கள் எண்ணிக்கையை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரம் அண்டார்டிகா தொடர்பான செயல்பாடுகளை ஒரு அமைப்பு கவனித்து வரும் நிலையில் அது சுற்றுலா பயணிகளிடம் இருந்து வரியை வசூலிக்கலாம் அல்லது பயணிகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கலாம் என்பது போன்ற யோசனைகளும் சூழலியலாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.