earth and moon
earth and moonfile image

நிலவு நம் பூமிக்கு துணைக்கோள் அல்ல அது ஒரு உயிர் கோள் எப்படி? பார்போம்..

நிலவு இல்லையெனில் பூமி மிக வேறுபட்ட உலகமாக இருக்கும். குறுகிய நாட்கள், கடுமையான பருவநிலைகள், கடல்சார் உயிர்களுக்கு ஆபத்து, மற்றும் இருள்மிக்க இரவுகள். நம் வாழ்க்கை இன்றையபோல் அமைதியாக இருக்காது.
Published on

செய்தியாளர்: காமேஷ்

விண்வெளி மண்டலத்தின் ஆச்சரியங்கள்

பல்வேறு ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது நமது விண்வெளி மண்டலம் அதில் பல்வேறு நட்சத்திரங்கள், பல்வேறு கோள்கள்,பல்வேறு வாயுக்கள் என மனிதன் இன்று வரை எட்ட முடியாத உயரத்தில் உள்ளது, நமது சூரிய குடும்பத்தை போல் பல்வேறு சூரிய குடும்பமும் இந்த விண்வெளி மண்டலத்தில் அடங்கி உள்ளது ...இதை பற்றி மனிதன் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கிறான் ஆனால் அது பல்வேறு ஆச்சரியகளை கொண்ட தொகுப்பாக உள்ளது....நாள்தோறும் நம் விண்வெளி மையம் விரிந்து கொண்டே உள்ளது...

சூரிய குடும்பம் பற்றிய மனிதனின் ஆய்வு

நம் சூரிய குடும்பத்திலும் பல்வேறு ஆய்வுகளை மனிதன் மேற்கொண்டு வருகிறான். சூரிய குடும்பத்தில் மொத்தம் ஒன்பது கோல்கள் தன்னை தானே சுற்றி கொண்டும் சூரியனை சுற்றி கொண்டும் உள்ளன. இதில் சில ஆய்வாளர்கள் மொத்தம் 8 கோள்கள் மட்டும் உள்ளது என்று கூறுகின்றனர். அது இன்றும் விவாத பொருளாகவே உள்ளது...

full moon
full moonFB

288 நிலவுகள் இருக்கிறதா? எப்படி?

பூமியை தவிர மற்ற கோள்களில் இப்போது வரை உயிர் இனங்கள் வாழ முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது . இந்த கோள்களுக்கு மொத்தமாக எவ்வளவு நிலவு உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா மொத்தம் 288 நிலவுகள் உள்ளது. இதில் பூமிக்கு 1 நிலவும் அதிக பட்சமாக சனி கோளுக்கு 146 நிலவுகளும் உள்ளது.

நிலவில் தண்ணீர் படிமங்கள் உள்ளதா?

பல்வேறு நாடுகள் நம் நிலவை ஆராய்ந்து வருகின்றன. நிலவில் நீர் உள்ளதா என்பதை அறிய பல்வேறு செயற்கை கோல்களை அனுப்புகின்றனர். அந்த வகையில் isro அனுப்பிய சந்திராயன் செயற்கைக்கோள் வேறு எந்த நாடும் போகாத நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி அங்கு தண்ணீர் படிமங்களை கண்டு பிடித்துள்ளது. அடுத்தாக நிலவில் மனிதன் தரை இறங்க ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Moon
MoonGoogle

சரி இப்போது நமது பூமியின் துணைக்கோளான நிலவு இல்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?

நிலவு இல்லையெனில், பூமி அதிக வேகமாகச் சுழலும். ஒரு நாள் 24 மணிநேரம் இல்லாமல், சுமார் 6 முதல் 12 மணிநேரம் மட்டுமே இருக்கும். பூமியில் கடல் அலைகளின் உயர்வு-தாழ்வு பெரும்பாலும் நிலவின் ஈர்ப்புச் சக்தியால்தான் நிகழ்கிறது. இதன் மூலம், அதிக சூறாவளி , கடல் கொந்தளிப்பு போன்றவை நிகழக்கூடும். இதனால் கடல்சார் உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சி பாதிக்கப்படும். இதனால், பருவநிலைகள் கடுமையாகும். மேலும் நிலவானது பூமியின் சாய்வை (axial tilt) நிலைத்திருக்கச் செய்கிறது. இதன் மூலம் சாய்வு அடிக்கடி மாறும்.

நிலவு இல்லாத பூமியின் நிலை இப்படிதான் இருக்கும்

இதனால் சில ஆண்டுகளில் கடுமையான குளிர்காலம், சில ஆண்டுகளில் கடுமையான கோடைகாலம் மாறி மாறி ஏற்படும். உயிரின வளர்ச்சியில் மாற்றம்கடலோர உயிர்கள், பவளப்பாறைகள் போன்றவை மிகுந்த பாதிப்பை சந்திக்கும். நிலவொளி இல்லையெனில் இரவு நேர வாழ் உயிர்களின் (nocturnal animals) வாழ்க்கை முறையும் மாறும். நிலவு இல்லாமல் இரவு மிகவும் இருண்டு இருக்கும். பூமியின் காலநிலை மிக அதிகமாக அலைபாயும்.

moon
moon© NASA

நிலவு இயற்கை நமக்கு் அளித்த கொடை

பொதுவாக நிலவு இல்லையெனில் பூமி மிக வேறுபட்ட உலகமாக இருக்கும். குறுகிய நாட்கள், கடுமையான பருவநிலைகள், கடல்சார் உயிர்களுக்கு ஆபத்து, மற்றும் இருள்மிக்க இரவுகள். நம் வாழ்க்கை இன்றையபோல் அமைதியாக இருக்காது. உயிரினங்கள் வாழ தகுதியற்ற கோளாக நமது பூமி இருந்து இருக்கும், நிலவு நமக்கு இயற்கையாய் அளித்த கொடை...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com