\
நிலாவிலிருந்து மண் எடுத்து வந்த பேக் ரூ.11 கோடிக்கு ஏலம் போனது

நிலாவிலிருந்து மண் எடுத்து வந்த பேக் ரூ.11 கோடிக்கு ஏலம் போனது

நிலாவிலிருந்து மண் எடுத்து வந்த பேக் ரூ.11 கோடிக்கு ஏலம் போனது
Published on

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்றபோது அங்குள்ள மண், கல் துகள்களை சேகரிக்க பயன்படுத்திய பேக் 11 கோடி ரூபாய்க்கு ஏலம்போனது.

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், அப்பல்லோ-11 விண்கலம் மூலம் கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி முதன்முறையாக சந்திரனில் இறங்கினார். அவருடன் மற்றொரு விண்வெளி வீரரான புஜ் அல்ட்ரினும் இருந்தார். இதையடுத்து சந்திரனிலிருந்து ஒரு சில தடயங்கள், மண் போன்றவற்றை ஒரு பேக்கில் சேகரித்து வந்தனர். இது மனித குலத்தின் அரிதான சாதனைகளில் ஒன்றாகும். ஆம்ஸ்ட்ராங் கொண்டு வந்த பேக்கில், மண் துகள்கள், சந்திர மண்டலத்தின் 5 வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரு செமீ விட குறைவான 12 பாறை படிவங்கள் உள்ளிட்டவைகள் கொண்டு வரப்பட்டன.

கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனிலிருந்து தடயங்களை எடுத்து வந்த அந்த பேக்கும், ஆம்ஸ்ட்ராங்கும், அவரது தோழரான புஜ் அல்ட்ரின் இருவரும் இணைந்து கையொப்பமிட்ட நினைவுச்சின்னங்களின் புகைப்படங்களும், நியூயார்க்கில் உள்ள சோத்பீ என்று இடத்தில் ஏலம் விடப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பேக் 1.8 மில்லியன் அமெரிக்க டாலருக்‍கு ஏலம் போனது. அதாவது, இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.11 கோடி ஆகும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com