சுவிஸ் பேங்கில் இந்தியர்களின் டெபாசிட் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத்தொகை 50 சதவிகிதம் அதிகரித்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள தகவலில், சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத்தொகை 50 சதவிகிதம் அதிகரித்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்தாண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை 45 சதவிதம் குறைந்து 4 ஆயிரத்து 500 கோடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தாண்டு 50 சதவிகிதம் அதிகரித்து 6 ஆயிரத்து 891 கோடியாக உள்ளதாக கூறியுள்ளது.
3வது முறையாக இந்தியர்களின் வைப்புத் தொகை சுவிஸ் வங்கிகளில் அதிகரித்துள்ளது. 2011ம் ஆண்டு இந்தியர்களின் வைப்புத் தொகை 12 சதவிகிதமும், 2013ம் ஆண்டு 43 சதவிகிதமும் அதிகரித்தது. அதன் பின்னர் இந்தாண்டு 50 புள்ளி 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தியர்கள் பெரும்பாலானோர் சுவிஸ் வங்களில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், வைப்புத் தொகை அதிகரித்துள்ளது.