சுவிஸ் வங்கியில் பணம்: 88வது இடத்தில் இந்தியா

சுவிஸ் வங்கியில் பணம்: 88வது இடத்தில் இந்தியா

சுவிஸ் வங்கியில் பணம்: 88வது இடத்தில் இந்தியா
Published on

சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போர் பற்றிய தரவரிசையில் கடந்த சில வருடங்களாக டாப் 50-ல் இருந்த இந்தியா தற்போது 88வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இயங்கி வரும் சுவிஸ் வங்கி சமீபத்தில், 2016 ஆம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், சுவிஸ் வங்கியில் உள்ள மொத்த வெளிநாட்டு பணமதிப்பில் இந்தியர்களின் பணம் 0.04 சதவீதமாக உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டில் 61வது இடத்திலும், 2015 ஆம் ஆண்டில் 75வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 88வது இடத்தில் உள்ளது. இந்தியர்களின் பணம் சுமார் ரூ.4500 கோடி குறைந்துள்ளது.

சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போர் பற்றிய தகவல்களை அந்த வங்கி ரகசியமாக வைத்திருக்கும் என்பதால், பலர் அந்த வங்கிகளில் தங்களது கருப்புப் பணத்தை டெபாசிட் செய்து வந்தனர். ஆனால், மத்திய அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் கடந்த சில ஆண்டுகளில் இந்திய மதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தொடர்ந்து முதல் இடத்தினை தக்கவைத்து கொண்டுள்ளது. கடந்த 1996 முதல் 2007 ஆம் ஆண்டு வரை இந்தியா டாப் 50-ல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com