மொஜ்தபா கமேனி மரணமா? உலகை அலறவிட்ட தகவல்! விரைவில் அறிவிப்பு வெளியாகுமா?
மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து ஈரானில் பரபரப்பு அதிகரித்துள்ளது. உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரங்களில் அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், வீரமரணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் பேசப்படுவதாக ஈரான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுடனான பதற்றம் சூடுபிடித்துள்ள நிலையில், கமேனியுடன் நேரடி தொடர்பு கொள்ளுவது மிகவும் கடினம் என அதிபர் பெசெஷ்கியான் ஒப்புக்கொண்டது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் முன்னாள் உச்சதலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், அவர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது மகனான மொஜ்தபா கமேனி உச்ச தலைவராக பெறுப்பேற்றார். ஆனால், ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் இன்று வரை, மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தலைக்காட்டவே இல்லை.
எந்த அறிவிப்பாக இருந்தாலும், எழுத்துப்பூர்வமாகவே வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக, அமெரிக்கா நடத்திய தாக்குதலில், மொஜ்தபாவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் ஈரானிலேயே இல்லை என்றும், ரகசிய இடமொன்றில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் பரவி வந்தது.
இதற்கிடையே, ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமை அழிக்கப்பட்டதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மொஜ்தபா கமேனி உயிரிழக்கும் தருவாயில் உள்ளார் என்றும், கூறியிருந்தார்.
ஆனால், இதனை மறுத்துள்ள ஈரானிய அதிகாரிகள், கமேனிக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், மொஜ்தபா கமேனி மரணம் அடைந்துவிட்டதாக அந்நாட்டிலேயே தகவல் பரவி வருகின்றன.
அதாவது, கமேனி மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்ற தகவல் ஈரானிய ஆட்சியின் உயர் மட்டங்களில் பரவி வருகிறது. அவரது வீரமரணம் குறித்த செய்தியை விரைவில் கேட்டால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம் என்று, உயர்மட்ட அதிகாரிகளே பேசி வருவதாக, ஈரானியர்களால் நடத்தப்படும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடனான போர் பதற்றங்களுக்கு மத்தியில், மொஜ்தபா கமேனியுடன் நேரடியாக தொடர்புகொள்வது "மிகவும் கடினமாக" உள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சமீபத்தில் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

