\
முகமது அலி ஜின்னா மகள் மரணம்!

முகமது அலி ஜின்னா மகள் மரணம்!

முகமது அலி ஜின்னா மகள் மரணம்!
Published on

பாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னாவின் மகள், தினா வாடியா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 98. 
பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் முகமது அலி ஜின்னா. பாகிஸ்தானின் தந்தை என அழைக்கப்பட்ட இவரது ஒரே மகள் தினா வாடியா. இவர் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்து வந்தார். முதுமை காரணமாக நேற்று மரணம் அடைந்தார். மகன் நுஸ்லி என்.வாடியா, மகள் டயனா, பேரன்கள் நெஸ், ஜேஹ் வாடியா ஆகியோருடன் வசித்து வந்தார் தினா வாடியா. நுஸ்லி பிரபலமான
வாடியா குழுமத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com