நெதர்லாந்து சென்றிருந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மோடி அந்த சைக்கிளில் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி தனது 2 நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாசார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அப்போது நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட், பிரதமர் மோடிக்கு சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்தார். அந்த சைக்கிளில் மோடி அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலதளங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.