\
சட்டைப் பையில் இருந்த செல்ஃபோன் வெடித்தது

சட்டைப் பையில் இருந்த செல்ஃபோன் வெடித்தது

சட்டைப் பையில் இருந்த செல்ஃபோன் வெடித்தது
Published on: 

சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்ஃபோன் வெடித்துச் சிதறியதில் ஒருவர் காயமடைந்தார். 

இந்தோனேசியாவின் ஜாவா அருகே செமரங் என்ற பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்தக் காட்சி, அங்குள்ள சிசிடிவியில் பதிவானது. இப்போது வெளியிடப்பட்டுள்ள அந்தக் காட்சியில், 47 வயது நபர் நின்று கொண்டிருக்கும்போது திடீரென அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோன் வெடித்துச் சிதறியதும், அவர் கீழே விழுந்துள்ளார். அவரது சட்டை தீப்பற்றி எரியத் தொடங்கியதும் ஒருவர் ஓடி வந்து, சட்டையைக் கழற்றி அந்த நபரைக் காப்பாற்றினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com