\
Missiles launched by North Korea cause major stir
Missiles launched by North Korea Reuters

தலைக்கு மேல் பறந்த ஏவுகணை : அதிர்ந்து போன ஜப்பான் அரசு.. ஆட்டம் காட்டும் வடகொரியா!

வடகொரியா ஏவிய ஏவுகணைகளால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published on: 

ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக வடகொரியா பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், தென்கொரியாவுக்கு அனைத்து வகையிலும் அமெரிக்கா உதவி வருகிறது.

மேலும், அந்த பகுதியில் உள்ள கடல் பகுதிகளில் தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து அவ்வப்போது போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வடகொரியா தங்கள் ஆயுத பலத்தை கடுமையாக அதிகரித்து வருகிறது.

Reuters

அந்த வகையில் தங்கள் பலத்தை உலகுக்கு காட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், குறுகிய தூர குரூஸ் ஏவுகணைகளும் ஏவி சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று வடகொரியா தனது கிழக்குக் கடற்பகுதியில் இருந்து ஜப்பான் கடலை நோக்கி 10-க்கும் மேற்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிப் பரிசோதனை நடத்தியுள்ளது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உறுதி செய்துள்ளன. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை ஜப்பானின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்கு மிக அருகில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஜப்பான் மீனவர்களுக்கு அருகே இந்த குண்டு விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஜப்பான் அரசும் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது.

Reuters

கொரிய எல்லைப் பகுதியில் அண்மையில் நடந்த நிலக்கண்ணிவெடி வெடிப்பில் 3 தென்கொரிய வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த நிலக்கண்ணிவெடிகளை வடகொரியாவே அங்குப் புதைத்து வைத்துச் சதி செய்தது என்று தென்கொரியாவும், ஐ.நா சபை அமைப்பும் குற்றம் சாட்டியுள்ளன. இந்தச் சம்பவத்திற்கு வடகொரியா பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தென்கொரியா வலியுறுத்தியதுடன், எல்லைப் பகுதியில் பிரச்சார ஒலிபெருக்கிகளை மீண்டும் செயல்படுத்த முற்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், தனது ராணுவ பலத்தைக் காட்டும் விதமாகவும் வடகொரியா இந்த ஏவுகணை வீச்சை நடத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

Missiles launched by North Korea cause major stir
வரலாற்றில் இல்லாத மாபெரும் சரிவு : கூகுளுக்கே இந்த நிலையா.? அதிர்ச்சியில் சுந்தர் பிச்சை!