உலகம்
'H2O என்றால் என்ன?’ - நடுவர்களை விழிபிதுங்க வைத்த அழகியின் பதில்
'H2O என்றால் என்ன?’ - நடுவர்களை விழிபிதுங்க வைத்த அழகியின் பதில்
வங்கதேசத்தில் நடைபெற்ற அழகி போட்டியில் H2O என்றால் என்ன என்ற கேள்விக்கு அழகி ஒருவர் அளித்த பதில் நடுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வங்கதேசத்தில் 'மிஸ் வங்கதேசம்' அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பெண்கள் கலந்துகொண்டனர். இறுதிச்சுற்றுக்கு தேர்வான அழகிகளுடன் நடுவர்கள், H2O என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
உடனே அங்கிருந்த அழகி ஒருவர் H2O என்றால் ரெஸ்டாரெண்ட் என பதிலளித்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே நடுவர்கள் H2O என்றால் தண்ணீர் என விளக்கமளித்தனர். அதற்கு அந்தப் பெண் H2O என்று டாக்கா நகரில் ஒரு ரெஸ்டாரெண்ட் உள்ளது. எனவே அப்படி கூறினேன் எனக் கூறினார்.