உலகம்
உலக அழகிக் போட்டியில் அமெரிக்கா வாழ் இந்தியப் பெண்: எந்த இடம் பிடித்தார் தெரியுமா?
உலக அழகிக் போட்டியில் அமெரிக்கா வாழ் இந்தியப் பெண்: எந்த இடம் பிடித்தார் தெரியுமா?
அமெரிக்கா வாழ் இந்தியரான சைனி உலக அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா, 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
இதில், அமெரிக்காவில் வாழும் இந்தியரான ஸ்ரீ சைனி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அவர் இந்தியாவில் பிறந்தவராக இருந்தபோதிலும், அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
முன்னதாக 2020ம் ஆண்டு நடைபெற்ற 'ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2020'ல் வென்ற மானசா மிஸ் வேர்ல்ட் 2021 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தியா கடைசியாக 2017 ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றது, மாடல் நடிகை மனுஷி சில்லர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.