தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெ நெல் பீட்டர்ஸ் இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வாகியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் உலக அளவில் பிரபஞ்ச அழகி போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்த அழகி போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்தது. இதில் உலகம் முழுவதும் இருந்து 92 அழகிகள் பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வெல்ல போட்டியிட்டனர்.
இந்தியா சார்பில் போட்டியிட்ட ஷ்ரத்தா சசிதர் முதல் 16 இடங்களை கூட பிடிக்காமல் வெளியேறினார். இறுதியில் தென் ஆப்பரிக்காவின் டெமி லெ நெல் பீட்டர்ஸ் பிரபஞ்ச அழகியாக பட்டம் வென்றார். கொலம்பியாவின் லாரா கான்சலேஸ், ஜமைக்காவின் டவினா பென்னட் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.