minister in australia has resigned after using an official vehicle from personal work
ஜோ ஹேலன்எக்ஸ் தளம்

இது நல்லா இருக்கே! சொந்த தேவைக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்திய அமைச்சர் ராஜினாமா! எங்க தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் அரசு வழங்கிய காரில் சொந்த பயணம் மேற்கொண்ட அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Published on

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர், ஜோ ஹேலன். இவர், கடந்த ஜனவரி 25ஆம் தேதி, அரசினால் தனக்கு வழங்கப்பட்ட காரையும் அதன் அரசு ஓட்டுநரையும் பயன்படுத்தி தனது நண்பர்கள் சிலருடன் சிட்னியிலிருந்து அங்குள்ள ஹண்டர் வேல்லி எனும் இடத்திற்கு தனிபட்ட விருந்திற்குச் சென்று திரும்பியுள்ளார். இதன்மூலம் 13 மணி நேரத்தில் சுமார் 446 கி.மீ. தூரத்திற்கு அவரது காரின் அரசு ஓட்டுநர் அந்த வாகனத்தை ஓட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் சொந்த பயணத்திற்காக அரசு வாகனத்தை உபயோகித்தது சர்ச்சையானதைத் தொடர்ந்து அதற்குப் பொறுப்பேற்று தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், “மனிதர்கள் தவறு செய்வது இயல்பு, என் மீது மக்கள் வைத்திருந்த நன்மதிப்பை நான் இழந்துவிட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவர் சம்மர் ஹில் தொகுதியின் அரசு உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அந்தப் பயணத்திற்கான டாலர் 759 செலவையும் ஹேலன் ஈடுகட்டுவார் எனக் கூறப்படுகிறது.

minister in australia has resigned after using an official vehicle from personal work
ஜோ ஹேலன்எக்ஸ் தளம்

முன்னதாக, அந்த நாட்டின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் முதல்வர் கிறிஸ் மின்ஸ் மக்களது வரிப்பணத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு காரை, அவர்கள் தனிப்பட்ட பயணங்கள் மற்றும் வேலைகளுக்கு பயன்படுத்துவதைத் தடை செய்யும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

minister in australia has resigned after using an official vehicle from personal work
‘காரில் சைரன்.. அரசு அதிகாரி ஸ்டிக்கர்’ ஊர் சுற்ற ஐஏஎஸ் போல் நடித்த இளைஞர்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com