உலகம்
வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிக்கு ஹெலிகாப்டரில் பிரசவம்
வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிக்கு ஹெலிகாப்டரில் பிரசவம்
வெள்ளத்தில் சிக்கிய பெண் ஒருவருக்கு ஹெலிகாப்டரில் பிரசவம் நடந்துள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். வடக்கு பெரு பகுதியில் வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியான மரியா பின்கோ என்பவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. அவரை மீட்டு ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியில் ஹெலிகாப்டரிலேயே மரியாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது.