\
மீண்டும் சர்ச்சை- விமானத்தில் சகபயணிக்கு சரமாரி குத்து விட்ட மைக் டைசன்!

மீண்டும் சர்ச்சை- விமானத்தில் சகபயணிக்கு சரமாரி குத்து விட்ட மைக் டைசன்!

மீண்டும் சர்ச்சை- விமானத்தில் சகபயணிக்கு சரமாரி குத்து விட்ட மைக் டைசன்!
Published on

விமானத்தில் சக பயணியை முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், சரமாரியாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் எல்லா காலத்திலும் சிறந்த குத்துச் சண்டை வீரராக அறியப்படுகிறார். ஆனால் போதை மருந்து, பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தனது புகழை அவர் இழந்தார். இந்நிலையில் மைக் டைசன் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து, புளோரிடாவிற்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது மைக் டைசனின் பின் இருக்கையில் வந்து அமர்ந்த இளைஞர் அவரிடம் பேசி தொந்தரவு செய்துள்ளார். சக பயணியின் இந்த செய்கை மைக் டைசனை அதிருப்தியில் தள்ளியுள்ளது. இதையடுத்து எரிச்சலூட்டும் விதமாக நடந்து கொண்ட சக பயணியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அடி வாங்கிய இளைஞர் ரத்தக் காயங்களுடன் சோகத்துடன் அமர்ந்திருந்த காட்சி வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com