35,000 அடி உயரத்தில் மோத இருந்த விமானங்கள்... விமானியின் சாதுரியத்தால் பிழைத்த உயிர்கள்!

35,000 அடி உயரத்தில் மோத இருந்த விமானங்கள்... விமானியின் சாதுரியத்தால் பிழைத்த உயிர்கள்!
35,000 அடி உயரத்தில் மோத இருந்த விமானங்கள்... விமானியின் சாதுரியத்தால் பிழைத்த உயிர்கள்!

35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், மற்றொரு விமானத்தின் மீது மோத இருந்த சம்பவம், விமானியின் சாதுரியத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் யுஎல்-504 விமானம் வந்துகொண்டிருந்தது. அதில் 275 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம் துருக்கி வான் பகுதியில், பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்துடன் நேருக்கு நேர் மோதக்கூடிய அபாயம் இருந்த நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த இலங்கை விமானத்தின் பறக்கும் உயரத்தை 35 ஆயிரம் அடிக்கு அதிகரிக்கவேண்டும் என்று அங்காரா தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து கூறப்பட்டது.

அப்போது 15 மைல் தொலைவில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை இலங்கை விமானத்தின் விமானிகள் கண்டறிந்தனர். இதனால் இலங்கை விமானிகள், விமானத்தை மேலே உயர்த்த மறுத்துவிட்டனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து கூறிய தகவலின்படி, இலங்கை விமானத்தின் கேப்டன் விமானத்தை குறிப்பிட்ட உயரத்திற்கு உயர்த்தியிருந்தால், வேகமாக வந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் நடுவானில் மோதி விபத்தை எதிர்கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com