மைக்ரோசாஃப்ட் ஆட்குறைப்பு: 4000 பேர் வேலை இழக்க வாய்ப்பு
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆட்குறைப்பு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இந்தியர்களே அதிகம் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சுமார் 1,92,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 71,000 பேர் அமெரிக்காவிலும், 1,21,000 பேர் மற்ற நாடுகளிலும் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர்கள் சேவையை மேம்படுத்துவதாக சில மாற்றங்கள் மேற்கொள்ளபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் பிறந்த சத்யா நாதெல்லா தலைமையிலான தொழில்நுட்ப நிறுவனம் சுமார் 3,000 முதல் 4,000 பணியாளர்களை குறைக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளது. இதில் அமெரிக்காவிற்கு வெளியே வேலை செய்பவர்களே அதிகமாக வேலை இழக்க உள்ளனர். இந்த தகவல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரால் கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் வெளிநாடுகளில் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு வேலை செய்து வருபவர்கள் வேலை இழக்க அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்தியாவை சேர்ந்தவர்களே அதிக அளவில் வேலை இழக்க உள்ளனர்.