பல பேரை சிரிக்க வைத்த ‘மிக்கி மவுஸ்’க்கு இன்று 92வது பிறந்தநாள்!

பல பேரை சிரிக்க வைத்த ‘மிக்கி மவுஸ்’க்கு இன்று 92வது பிறந்தநாள்!
பல பேரை சிரிக்க வைத்த ‘மிக்கி மவுஸ்’க்கு இன்று 92வது பிறந்தநாள்!

உலக அளவில் பிரபலமாகி, பல பேரை சிரிக்க வைத்த மிக்கி மவுஸ் தனது 92 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.

கார்ட்டூன் நட்சத்திரமாக வலம்வரும் மிக்கிக்கு புதுமையான உருவம் கொடுத்து, நடை, உடை, பாவனைகளால் அழகுபடுத்தி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது டிஸ்னி நிறுவனம். மிக்கி கதாபாத்திரத்தை உருவாக்கியதற்காக வால்ட் டிஸ்னி நிறுவனத்துக்கு 1932 ஆம் ஆண்டு சிறந்த கார்ட்டூன் கதாபாத்திர விருது வழங்கப்பட்டது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் வலம்வந்த மிக்கி முதல்முறையாக 1930 ஆம் ஆண்டு STEAM BOAT WILLIE என்ற குறும்படத்தில் அறிமுகமானது. மிக்கிக்கு ஜோடியாக மின்னி மவுஸ் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. Walt disney, Jimmy Macdonald, Wayne Allwine போன்ற பல கலைஞர்கள் மிக்கி கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com