பாப் மன்னனுக்கு இன்று 60 ஆவது பிறந்தநாள்

பாப் மன்னனுக்கு இன்று 60 ஆவது பிறந்தநாள்

பாப் மன்னனுக்கு இன்று 60 ஆவது பிறந்தநாள்
Published on

கிங் ஆப் பாப் என்ற புகழை பெற்ற மைக்கல் ஜாக்சனின் 60ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

பாப் பாடகர் மைக்கல் ஜாக்சன் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி பிறந்தார். தானே பாடல் எழுதி, இசையமைத்து நடனமாடும்‌ வித்தகரான மைக்கல் ஜாக்சனின் வித்தியாசமான நடனத்திற்கு மயங்காதவர் யாரும் இல்லை. 1971-க்கு பிறகு அவர் தனியாக மேடைநிகழ்ச்சிகளில் பங்கேற்க இவருடைய ரோபோ மற்றும் மூன்வாக் போன்ற தனித்துவமான நடனம் மிகப் பிரபலம். 

பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் நிகழ்ச்சிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார் மைக்கல் ஜாக்சன். இவர் வெளியிட்ட இசைத்தொகுப்புகள் உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்தன. 

சிறுவர்களுக்கு எதிரான பாலியன் குற்றச்சாட்டு, நிவாரண நிதி திரட்டுவதில் தோல்வி என பல்வேறு பிரச்னைகள் அவரை விரக்தி அடைய வைத்தன. வலியை மறக்க அவர் எடு‌த்துக் கொண்ட வலி நிவாரண மாத்திரைகளே அவரது உயிரையும் குடித்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்த போதிலும், ரசிகர்கள் நெஞ்சத்தில் பாப் உலகின் மூடிசூடா மன்னனாக என்றும் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com