mexico man
mexico mantwitter

மனைவியைக் கொன்று மூளையைச் சாப்பிட்ட கணவர்! மெக்சிகோவில் நடந்த விநோதம்! விசாரணையில் பகீர் தகவல்

மெக்சிகோவில் மனைவியைக் கொன்று அவருடைய மூளையை உணவுடன் கலந்து சாப்பிட்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on

மெக்சிகோவைச் சேர்ந்தவர் அல்வாரோ. பில்டராக பணி புரிந்துள்ளார். இவரது மனைவி மரியா மான்செராட். இவர்கள், கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மரியா மான்செராட்டுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் 5 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், அல்வாரோ தன் மனைவியை கடந்த ஜூன் 29ஆம் தேதி கொலை செய்து உள்ளார். அதன் பாகங்களை வீட்டின் பின்புறம் வீசியுள்ளார். இதில் மனைவியின் மூளையை மட்டும், டகோஸ் (Tacos) என்ற உணவுடன் இணைத்து அடைத்துவைத்துச் சாப்பிட்டுள்ளார். மேலும் மண்டை ஓட்டை எரித்து சாம்பலாக்கி உள்ளார்.

அல்வாரோ போதையில் இதைச் செய்துள்ளார். போதை தெளிந்ததும், தான் எவ்வளவு கொடூரமான காரியத்தைச் செய்துள்ளோம் என்பதை உணர்ந்துள்ளார். பின்னர், இதுகுறித்து தன் வளர்ப்பு மகளிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரிலேயே காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட கடந்த ஜூலை 2ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

murder
murderfile image

மேலும் காவல் துறையிடம் அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்துள்ளது. தான் வழிபடும் சைத்தான்தான் இந்த கொலையைச் செய்ய தனக்கு ஆர்டர் போட்டதாகத் தெரிவித்துள்ளார். ’அல்வாரோ சைத்தானை வழிபாடு செய்யும் குழுவைச் சேர்ந்தவர் என்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்’ என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com