மெக்சிகோ நாட்டின் அகபுல்கோ நகரின் சிறையில் நடைபெற்ற கலவரத்தில் 28 கைதிகள் உயிரிழந்தனர்.
மெக்சிகோ நாட்டில் உள்ள சிறைச்சாலை 1624 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி கொண்டது. ஆனால், இதில் 1,951 ஆண்கள் மற்றும் 110 பெண்கள் என 30 சதவீதம் அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கு அவ்வப்போது பிரச்சனைகள் உருவாவது வழக்கம். இந்நிலையில், கைதிகளுக்கு இடையே சமீபத்தில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 28 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.