வினையாக மாறிய டிக்டாக் பிராங்க்.. - இளம்பெண் உயிரிழந்த கொடுமை...!
டிக்டாக் வீடியோவில் பிராங்கில் ஈடுபட்ட பெண் தவறுதலாக துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைதளங்களில் அக்கவுண்ட் இல்லாதவர்கள் யார் என்று எண்ணி சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு அனைவரும் சமூக வலைதளங்களை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டோம். அதிலும் சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் என அனைத்து தளங்களிலும் பார்வையாளர்களை கவர, ஏதோ ஒரு வகையில் பலவற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மெக்ஸிகோ, சிஹூவாஹூவைச் சேர்ந்த இளம்பெண் அரிலின் மார்டினெஸ். இவர் டிக்டாக்கில் கேளிக்கை வீடியோக்களையும் பிராங்க் வீடியோக்களையும் வெளியிட்டு பார்வையாளர்களை கவர்ந்து வந்தார். அதேபோன்று டிக்டாக்கில் பார்வைகளைப் பெறுவதற்காக தனது நண்பர்களுடன் ஒரு போலி கடத்தல் வீடியோவை படமாக்க முற்பட்டார். அவர் பணயக்கைதியின் பாத்திரத்தில் நடித்தார். அவரின் கணுக்கால் கட்டப்பட்டு கைகளால் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார். அதே நேரத்தில் பல ஆண்கள் அவரைச்சுற்றி சிறைபிடித்தவர்களாக நடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பெண்ணின் தலைக்கு மேல் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை அவரது நண்பர் தவறுதலாக அழுத்தியதில் துப்பாக்கியின் தோட்டா திடீரென அந்த பெண்ணின் தலையில் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.