உலகம்
பிரதமர் பதவி விலக வேண்டும்: ஸ்பெயின் மாணவர்கள் போராட்டம்
பிரதமர் பதவி விலக வேண்டும்: ஸ்பெயின் மாணவர்கள் போராட்டம்
கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிக்க கோரி ஸ்பெயினில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்தும் அதை தடுக்க முயன்ற காவல்துறையை கண்டித்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்சிலோனாவில் உள்ள தேசிய காவல்துறை தலைமை அலுவலகம் முன்பாக மாணவர்கள் கூடி ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோயை கண்டித்தும் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பெயினில் இருந்து தனி நாடு கோரி கேட்டலோனியாவைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 90 சதவிகிதத்தினர் தனி நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.