மீடியா முன்னிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் கையை அவரது மனைவி தள்ளிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்புடன் சவுதி அரேபியாவிலிருந்து, விமானம் மூலம் இஸ்ரேல் சென்றார். விமான நிலையத்திலிருந்து அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முன்னாள் சென்ற அதிபர் டிரம்ப் தனது மனைவியின் கையை பிடிக்க முயன்றார். ஆனால், மீடியா அவர்களை படம்பிடித்தபடி இருந்ததை கூட பொருட்படுத்தாமல் அதிபரின் மனைவி மெலானியா, அவரின் கையை தள்ளி விட்டார். அதன்பின் அதிபர் டிரம்ப் எதுவும் நடைபெறாததை போல் சாதாரணமாக நடந்து சென்றார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

