உலகம்
புகழ்பெற்ற அமெரிக்க நாட்டுப்புற பாடகர் டில்லிஸ் மரணம்
புகழ்பெற்ற அமெரிக்க நாட்டுப்புற பாடகர் டில்லிஸ் மரணம்
புகழ்பெற்ற அமெரிக்க நாட்டுப்புற பாடகர் மெல் டில்லிஸ் குடல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகர் மெல் டில்லிஸ் உயிரிழந்தார். அவருக்கு வயது 85. பாடல் ஆசிரியரும், பாடகருமான மெல் டில்லிஸ் 60-க்கும் மேற்பட்ட ஆல்பங்களுக்காக சொந்தமாக பாடல் எழுதி பாடியுள்ளார். அண்மை காலமாக குடல் நோயால் அவதிப்பட்டு வந்த டில்லிஸ் ஃபுளோரிடாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மூச்சு குழலில் ஏற்பட்ட பாதிப்பால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இசைத் துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு டில்லிஸுக்கு அப்போதைய அதிபர் பராக் ஒபாமா தேசிய கலைக்கான விருது வழங்கி கவுரவித்தார்.