\
ஹாரி மகனுக்கு பெயர் சூட்டியது அரச குடும்பம்...!

ஹாரி மகனுக்கு பெயர் சூட்டியது அரச குடும்பம்...!

ஹாரி மகனுக்கு பெயர் சூட்டியது அரச குடும்பம்...!
Published on

பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலின் திருமணம் கடந்த ஆண்டு மே மாதம் லண்டனில் உள்ள விண்ட்சரில் கோலாலகமாக நடைபெற்றது. இதனைதொடர்ந்து இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியருக்கு கடந்த திங்கள் கிழமை ஆண் குழந்தை பிறந்ததாகவும் 7 பவுண்டுகள் எடையில் குழந்தை இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இளவரசர் மற்றும் இளவரசி தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தை என்பதால் இங்கிலாந்து நகரமே விழாக் கோலம் பூண்டது.

இந்நிலையில் பிரிட்டன் இ‌ளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு‌ என்ன பெயர் வைக்கப் போகிறார்கள் எனவும் அமெரிக்க முறைப்படி பெயர் வைக்கப்படுமா? அல்லது பிரிட்டன் முறைப்படி பெயர் வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. இந்த சூழலில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி, தனது மகனுக்கு “ஆர்ச்சி மவுன்ட்பேட்டன் விண்ட்சர்” என பெயர் சூட்டியுள்ளார். மேலும் வெளியுலகுக்கு முதன் முதலாக குழந்தையை காண்பித்த ஹாரி-மேகன் தம்பதியினர், பெற்றோர் என்ற அந்தஸ்து மிகுந்த உற்சாகத்தை தருவதாக தெரிவித்தனர். முன்னதாக குழந்தையை இங்கிலாந்து மகாராணி எலிசபெத்திடம் காட்டி ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com