\
இளவரசர் ஹேரி - மேகன் தம்பதிக்கு ஆண் குழந்தை!

இளவரசர் ஹேரி - மேகன் தம்பதிக்கு ஆண் குழந்தை!

இளவரசர் ஹேரி - மேகன் தம்பதிக்கு ஆண் குழந்தை!
Published on: 

இங்கிலாந்து இளவரசர் பீட்டர் ஹேரி மற்றும் மேகன் மார்க்ல் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது‌.  

பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலின் திருமணம் கடந்த ஆண்டு மே 19ஆம் தேதி லண்டனில் உள்ள விண்ட்சரில் கோலாலகமாக நடைபெற்றது. இந்நிலையில் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியருக்கு பிரிட்டன் நேரப்படி காலை 5.26 மணியளவில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் 7 பவுண்டுகள் எடையில் குழந்தை இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் மற்றும் இளவரசி தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தை என்பதால் இங்கிலாந்து நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து கருத்து கூறியுள்ள பீட்டர் ஹேரி, வாழ்க்கையின் அற்புதமான தருணத்தை உணர்வதாக‌ தெரிவித்துள்ளார். மேலும் தாய்மையைப் போற்றுவதாக அவர் உணர்வுபூர்வமாக பேட்டி அளித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இது மெய்சிலிர்க்கும் அனுபவம். மக்களின் அன்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று தெரிவித்தார்.

ஹாரியின் குழந்தை பிரிட்டிஷ் வம்சாவளியின் 7-வது ஆண் வாரிசாகும். இரண்டாவது ராணி எலிசபெத்தின் 8-வது கொள்ளுப் பேரனாகும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com