நாட்டின் பிரதமர் போல் இம்ரான்கான் பேசவில்லை: விதிஷா மைத்ரா

நாட்டின் பிரதமர் போல் இம்ரான்கான் பேசவில்லை: விதிஷா மைத்ரா

நாட்டின் பிரதமர் போல் இம்ரான்கான் பேசவில்லை: விதிஷா மைத்ரா

இம்ரான்கான் ஒரு நாட்டின் பிரதமர் போல் பேசாமல் போரைத் தூண்டும் வகையில் பேசியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறையின் செயலாளர் விதிஷா மைத்ரா தெரிவித்துள்ளார்.

ஐநா சபையில் 74வது கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அணு ஆயுதங்களைக் கொண்ட நாடு போரிட்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என எச்சரிக்கும் வகையில் பேசியிருந்தார். இதற்கு இந்தியா தரப்பில் வெளியுறவுத்துறையின் முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா பதிலடி கொடுத்துள்ளார். இம்ரான்கான் ஒரு நாட்டின் பிரதமர் போல் பேசாமல் போரைத் தூண்டும் வகையில் பேசியுள்ளதாக தெரிவித்தார். 

அல் கய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பில் இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஒரே நாடு என்பதை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளுமா எனவும் விதிஷா மைத்ரா கேள்வி எழுப்பியுள்ளார். பயங்கரவாத அமைப்புகள் தங்கள் நாட்டில் இல்லை என்பதை ஐ.நா.கண்காணிப்பாளர்கள் உறுதி செய்துகொள்ளலாம் என கூறியுள்ள இம்ரான்கான் அதை ஒப்புக்கொள்வாரா என்றும் விதிஷா மைத்ரா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com