“என்ன இதெல்லாம் கெடக்கு” .. பர்கர் சாப்பிட்டபோது அதிர்ச்சியடைந்த பெண்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

இங்கிலாந்தில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கிளை நிறுவனம் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
mcdonalds, burger
mcdonalds, burgertwitter page

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

உணவுப் பொருள் விற்பனை செய்வதில் உலகின் முன்னணி நிறுவனமாக மெக்டொனால்ட்ஸ் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும், பர்கர் உள்ளிட்ட துரித உணவுகளை விற்பனை செய்துவரும் இந்நிறுவனம், அமெரிக்காவின் சிகாகோவை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. இதற்கென எண்ணற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில், மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் கிளை ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் கிழக்கு லண்டனில் உள்ள ஒரு மெக்டொனால்ட் கிளைக்கு, பெண் வாடிக்கையாளர் ஒருவர் சென்று சீஸ் பர்கர் ஆர்டர் செய்துள்ளார். அந்த பர்கர் வந்த பின்பு, சாப்பிடத் தொடங்கிய பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சீஸ் பர்கரில், எலி எச்சம் இருந்துள்ளது. இதனால் அதிர்ந்துபோன அந்த வாடிக்கையாளர் வால்தம் பாரஸ்ட் கவுன்சிலை நாடி புகார் அளித்தார்.

அதன்பேரில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்தக் கடைக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போதுதான் கடை சுகாதாரமற்ற முறையில் இயங்கியது தெரியவந்துள்ளது. ஆய்வின் போது, எலியின் எச்சங்கள் சிதைந்து கிடைப்பதும், உணவு தயாரிக்கும் இடம் அசுத்தமாக இருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும், அங்கு வேலை பார்க்கும் பணியாளர் அறையும், உணவு சேமிப்பு பகுதியும் சுகாதாரமற்றதாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்தச் சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்றது என்றாலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கான தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி, சுகாதார விதிகளை மீறிச் செயல்பட்ட மெக்டொனால்ட்ஸ் கிளை நிறுவனம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் ரூ.4.8 கோடி அபராதம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் பெண் சட்ட நடவடிக்கைக்கு மேற்கொண்ட செலவுத்தொகை ரூ.22.6 லட்சம் மற்றும் கூடுதல் தொகை ரூ.19,537 என மொத்தம் சுமார் ரூ.5 கோடி அபராத தொகை தர வேண்டும் என நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற நிறுவனங்களிடம் வாடிக்கையாளர்கள் உயர்ந்த சுகாதாரத்தை எதிர்பார்த்து வருகின்றனர் எனக் கூறிய நீதிமன்றம், அதைத் தக்க வைக்கும்படி நடக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளது. அதேவேளை, தவறை ஒப்புக்கொண்டு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டது பாராட்டத்தக்கது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com