உலகம்
ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
தெற்கு சீனக் கடலை ஆக்கிரமிக்கும் சீனாவின் நடவடிக்கையைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.
சிங்கப்பூரில் நடந்த ஷாங்ரி லா பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ், சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதே நேரத்தில் வடகொரிய விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சீனாவை அவர் பாராட்டினார்.
ஈராக், சிரியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமன்றி, ஆசிய நாடுகளிலும் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.