\
அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை: வளர்ப்பு தந்தை கைது

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை: வளர்ப்பு தந்தை கைது

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை: வளர்ப்பு தந்தை கைது
Published on: 

அமெரிக்காவின் டெக்சா‌ஸில் மூன்‌று வயது இந்திய குழந்தை ஷெரீன் காணாமல் போன விவகாரத்தில் வளர்ப்பு தந்தை மேத்யூவை காவல்துறையினர் கைது செய்தனர்.

அமெரிக்காவின் டெக்சா‌ஸில் உள்ள அவரது வீடு அருகே இருந்த சுரங்கப் பாதையில் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் ஒ‌ன்று கண்டெடுக்கப்பட்டது. அது காணாமல் போன இந்தியக் குழந்தை ஷெரீனின் உடலா? என உறுதி செய்யப்படவில்லை. இந்தச் சூழலில் காவல்நிலையத்துக்கு தாமாக செ‌ன்ற மேத்யூ முன்பு தெரிவித்த தகவலுக்கு முரணாக வேறு தகவலை தெரிவித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். காணாமல் போன இந்திய சிறுமி இரு வாரங்களுக்கு முன் பா‌ல் குடிக்க மறுத்ததால் அதிகாலை 3 மணி அளவில் வீட்டுக்கு வெளியே குழந்தையை மேத்யூ விட்டுச் சென்றார். ‌அப்போது முதல் ஷெரீன் ‌‌காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com