அதிர்ந்த மேளங்கள்.. ஆர்ப்பரித்த ஒலிபெருக்கிகள்.. மக்கள் போராட்டத்தால் ஸ்தம்பிக்கும் இஸ்ரேல்!

இஸ்ரேலில் உச்சநீதிமன்ற அதிகாரத்தைக் குறைக்கும் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இஸ்ரேலில் உச்சநீதிமன்ற அதிகாரத்தைக் குறைக்கும் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தலைமையிலான அரசு, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலான சட்டத்திருத்தங்களை செய்துள்ளது. அந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் டெல் அவிவில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேளங்களை அடித்தபடி ஒலிபெருக்கிகள் மூலம் ஒலி எழுப்பியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com