மாசுபாடு இல்லாததால் மூடிக்கொண்ட ஓசோன் துளை - ஐநா

மாசுபாடு இல்லாததால் மூடிக்கொண்ட ஓசோன் துளை - ஐநா
மாசுபாடு இல்லாததால் மூடிக்கொண்ட ஓசோன் துளை - ஐநா

கடந்த மார்ச் மாதம் முதல் உலகின் மாசுபாடு குறைந்ததால் ஓசோனின் துளை அடைபட்டுவிட்டதாக ஐநா வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவியதால் உலகின் பெரும்பாலான நாடுகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதனால் தொழிற்சாலைகள், வாகனங்கள் என அனைத்தும் இயக்கப்படவில்லை. இதனால் உலகின் வெப்பமயமாதல் வெகுவாக குறைந்தவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் புவிக்கு மேலே உள்ள ஓசோன் படலத்தின் துளை குறைந்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஹெமிஸ்பியர் அடுக்கிற்கு செல்லும் மாசின் அளவு குறைந்ததாலும், ஸ்ட்ரேடோஸ்பியர் அடுக்கு அதிக அளவு குளர்ச்சி அடைந்ததாலும் ஓசோன் படலத்தின் துளை அடைபட்டுவிட்டதாக ஐநா வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் மாசுபாடு குறைவே இதற்கு காரணம் என்றும், இதற்கும் கொரோனா வைரஸ்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com