\
Hitler's Eagle Nest
Hitler's Eagle Nest AI

ஹிட்லரின் மாளிகையில் பயங்கர தீ! ஜெர்மனியில் பெரும் பரபரப்பு!

பவேரியாவில் ஹிட்லரின் ‘ஈகிள்ஸ் நெஸ்ட்’ தீக்கிரை: விசாரணை தீவிரம்!
Published on: 
Summary

ஜெர்மனியில் ஹிட்லரின் வரலாற்று மாளிகையான ‘ஈகிள்ஸ் நெஸ்ட்’ தீப்பற்றி எரிந்தது. பவேரியா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கட்டடத்தில் தீ வேகமாக பரவியதால், தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்த பல மணி நேரம் போராடினர். சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர், ஆனால் தீ விபத்திற்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது உறுதியாகவில்லை.

செய்தியாளர் - M. மீரா

ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லருடன் தொடர்புடைய புகழ்பெற்ற வரலாற்றுக் கட்டடமான ‘ஈகிள்ஸ் நெஸ்ட்’ தீப்பற்றி எரிந்துள்ளது.

ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில், பெர்ச்ச்டெஸ்காடன் ( Berchtesgaden) மலைப்பகுதியில் அமைந்துள்ள கெல்ஸ்டைன்ஹாஸ் (Kehlsteinhaus) என்ற இந்தக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் தீப்பிழம்புகள் தெரியும் அளவுக்குத் தீ வேகமாகப் பரவியது.

Hitler's Eagle Nest
Hitler's Eagle Nest Reuters

தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, கட்டடம் முழுவதும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாகக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் இரவு நேரத்திலும் தொடர்ந்து நடைபெற்றன. இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபருக்கும் தீ விபத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்தக் கட்டடம் பெர்ச்ச்டெஸ்காடன் ( Berchtesgaden) பகுதிக்கு மேலே 1,834 மீட்டர் உயரத்தில் கெல்ஸ்டைன்ஹாஸ் அமைந்துள்ளது. இது அந்தப் பிராந்தியத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். கடந்த 1937-38ஆம் ஆண்டுகளில் ஹிட்லருக்கான பிரத்யேக விருந்தினர் மாளிகையாக இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் தூதர்களைச் சந்திப்பதற்காக இது உருவாக்கப்பட்டது.

Hitler's Eagle Nest
Hitler's Eagle Nest AI

இரண்டாம் உலகப் போரின்போதும் பெரிய பாதிப்பின்றித் தப்பிய இந்தக் கட்டடம், 1952ஆம் ஆண்டு முதல் மலைப்பகுதி விடுதியாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது ஜெர்மனியின் பவேரியா மாநில அரசுக்குச் சொந்தமான இந்த இடத்தில் உணவகமும் வரலாற்றுக் கண்காட்சிகளும் நடந்து வருகிறது.

Hitler's Eagle Nest
3 பில்லியன் பேரல் பாதிப்பு.. எண்ணெய் சந்தையை உலுக்கிய ஈரான் போர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com