சீனா: பற்றி எரிந்த 42 மாடிக் கட்டடம்! கரும்புகை மண்டலமாக மாறிய சாங்ஷா நகரம்!

சீனா: பற்றி எரிந்த 42 மாடிக் கட்டடம்! கரும்புகை மண்டலமாக மாறிய சாங்ஷா நகரம்!
சீனா: பற்றி எரிந்த 42 மாடிக் கட்டடம்! கரும்புகை மண்டலமாக மாறிய சாங்ஷா நகரம்!

சீனாவின் தெற்கில் உள்ள ஹுனான் மாகாணத் தலைநகர் சாங்ஷாவில் அடுக்கு மாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

சீனாவின் தெற்கில் உள்ள ஹுனான் மாகாணத் தலைநகர் சாங்ஷாவில் சீன அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீன டெலிகாம் நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று சுமார் 200 மீட்டர் (715 அடி) உயரம் உள்ள 42 தளங்கள் கொண்ட அந்த கட்டடத்தின் கீழ்த்தளத்தில் ஏற்பட்ட தீ, மளமளவென மேல்தளங்களுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாகக் காணப்படுகிறது.

தகவல் அறிந்து 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும், மக்கள் உயிரிழப்பு, காயம் குறித்தும் எந்தத் தகவலும் இல்லை. தீப்பற்றி எரியும்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com